குடியுரிமை திருத்த சட்டம் : ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்

Default Image
  • குடியுரிமை சட்ட திருத்த  மசோதவிற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
  • திமுக சார்பில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.   

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த  மசோதவை கொண்டு வந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில்,குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும்  இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.இதனை தொடர்ந்து சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதன் விளைவாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது.

குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர்கள் பங்கேற்றனர்.அப்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் ஈடுபட்டனர்.பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இன்று திமுக சார்பில் தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 க்கு அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
power outage
wayanad by poll election
vijay angry
Vignesh
Stanley Government Hospital
karthikai special (1)