புதுச்சேரி திருபுவனை, திருவண்டார்கோயில் கொத்தபுரிநத்தத்தில் தனியார் மதுபான கடை பார் வசதியுடன் அமைந்துள்ளது. ஞாயிற்றுகிழமை இரவு 3 பேர் மதுக்கடைக்கு வந்து பல்வேறு பிராண்ட் சரக்குகளை வாங்கி அருந்தினர். இறுதியில் பணம் தராமலேயே கடையைவிட்டு கிளம்ப முயற்சித்தனர். அவர்களிடம் பணம் கேட்ட போது தர மறுக்கவே, கடையின் காசாளரும் கல்லாவைவிட்டு இறங்கிச் சென்று பணம் கேட்டுள்ளார். அப்போதும் நாங்கள் மிகப்பெரிய ரவுடிகள் எனக் கூறிக் காசாளரை மிரட்டி தங்களுக்கு மேலும் சரக்குகள், பணமும் தர கேட்டு மிரட்டத் தொடங்கினர். இதற்கு காசாளரும், ஊழியர்களும் கொடுக்க மறுத்தனர்.
இந்நிலையில், அந்த மூன்று பேரும் அவர்கள் கொண்டு வந்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை அந்த பாரின் மீது வீசினர். இதனால் அங்குள்ள மதுபாட்டில்கள் உடைந்தன. இதன்காரணமாக அக்கடையில் மது அருந்தி கொண்டிருந்தவர்கள் பயந்து ஓடினர். பின்னர் இந்த வெடிகுண்டு வீச்சில் ஊழியர்கள் இரண்டுபேருக்கு சிறிய அளவில் காயமும் ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து காசாளர் பாஸ்கர் திருபுவனை போலீஸில் புகார் கொடுத்தார். மேலும் அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு ரவுடிகளை விசாரணை நடத்திய போலீசார், சன்னியாசிக்குப்பம் பேட் பகுதி சேர்ந்த விக்னேஷ், கதிர், முகேஷ் ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…