மாணவர்களைக் கத்தி எடுக்க தூண்டுவது சினிமா தான் – இயக்குனர் லெனின் பாரதி காட்டம் !
இன்றைய மாணவர்களைக் கத்தி எடுக்க தூண்டுவது சினிமாவும், அவர்கள் நேசிக்கும் கதாநாயகர்களும் தன என்று மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி அவர்கள் காட்டமாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் விருது வழங்கும் விழாவில் பேசிய லெனின் பாரதி இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களும் இளைஞர்களும் சினிமா கதாநாயகர்களை தங்களது மானசீக குருவாக கருதுகிறார்கள். அவர்கள் திரையில் என்ன செய்கிறார்களோ,அதனை ஏற்றுக் கொண்டு பொதுவெளியில் மாணவர்களும் இளைஞர்களும் செய்கிறார்கள் ஏற்றுக் கூறியுள்ளார்.
மேலும், பேருந்தில் கத்தியுடன் திரிந்த மாணவர்களை கைது செய்துள்ளது காவல்துறை. அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக கழிவறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக கூறி இருக்கிறார்கள். ஆனால், “வசதி படைத்தவர்கள் தவறு செய்யும் போது மட்டும் இப்படி வழுக்கி விழுவது இல்லையே” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.