கஜா புயலால் தஞ்சை , திருவாரூர் , நாகப்பட்டினம் , புதுக்கோட்டை என டெல்ட்டா மாவட்ட பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு செய்வதறியாது மக்கள் வேதனையுடன் இருக்கின்றனர். இதனால் பல்வேறு மக்கள் , சமூக ஆர்வலர்கள் , சினிமா பிரபலங்கள் என டெல்ட்டா பகுதி மக்களுக்கு பல்வேறு தரப்பினர் பொருட்கள் வழங்கியும் , நிதியுதவி வழங்கியும் வருகின்றனர்.
இந்நிலையில் சினிமா பிரபலங்களான டெல்லி கணேஷ் மற்றும் ரமேஷ் கண்ணா இது தொடர்பாக வீடியோ மூலமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சினிமா பிரபலம் டெல்லி கணேஷ் வீடியோ மூலமாக டெல்டா பகுதி மக்களுக்கு அனைவரும் சேர்ந்து உதவ வேண்டுமென்றும் , டெல்டா பகுதி மக்களுக்கு உதவி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.ATKVA பக்கத்துடன் இணைத்து செயல்பட அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோல் சினிமா பிரபலம் ரமேஷ் கண்ணா வீடியோ மூலமாக டெல்டா பகுதி மக்களுக்கு உதவ வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார்.அவர் கூறிய வீடியோ மூலம் தெரிவித்ததாவது , கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு அதிகமானோர் உதவி செய்கிறார்கள் , நிதி உதவியும் அளிக்கிறார்கள்.இங்கே வர்தா புயல் வந்த போது நேரடியாக இங்கே வந்து உதவி செய்தார்கள்.தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.இதுவரை பலரும் உதவி செய்கிறார்கள் , மக்கள் இதுவரை செய்யும் உதவியும் , உடல் உழைப்பும் போதுமானதாக இல்லை.உதவி செய்ய ஏராளமான ஆட்கள் தேவைப்படுகிறது வாருங்கள்.ATKVA பக்கத்துடன் இணைத்து செயல்படுவோம் என்று நடிகர் ரமேஷ் ரமேஷ் கண்ணா அழைப்பு விடுத்துள்ளார்.
dinasuvadu.com
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…