கிறிஸ்துமஸ் பண்டிகை – டிடிவி தினகரன் வாழ்த்து..!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்
நாளை நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், டிடிவி தினகரன் அவர்கள், வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அன்பையும் பொறுமையையும், மனித சமுதாயத்திற்கு போதித்த இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்மஸ் திருநாளை கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
ஆசிய கண்டத்தில் உள்ள பெத்லகேமில் பிறந்து உலகெங்கும் அன்பின் நற்குணத்தை போதித்தவர் இயேசுநாதர். அன்பு கொள்ளாதவர் கடவுளை அறியாதவர் ஏனெனில் அன்பே கடவுள் என்பது போன்ற இயேசுபிரானின் நல்வாழ்த்துக்கள் மக்களின் மீது அனைவரையும் அன்பு செலுத்த வைப்பவை.
இயேசுநாதரின் சொற்களை மனதில் நிறுத்தி அனைவரிடமும் அன்பு செலுத்துவோம். உலகெங்கும் அமைதி நிலவி மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட கிறிஸ்துமஸ் நாளில் நெஞ்சார வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/BKxI5YRkCt
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 24, 2022