கிறிஸ்துமஸ் 2023: அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து செய்தி.!

Christmas 2023

கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (திங்கட்கிழமை) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பலரும் தங்களது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்கள் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 

திராவிட மாடல் அரசில் கிறிஸ்தவ மக்களுக்கு எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமெனச் சட்டப்பேரவையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன்.

 

அனைத்துச் சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் இந்த அரசின் சார்பில் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுளார்.

டி. டி. வி. தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி. டி. வி. தினகரன் தனது வாழ்த்து குறிப்பில், உலக சகோதரத்துவத்தையும், உண்மையான வாழ்வியல் தத்துவத்தையும் நம் அனைவருக்கும் உணர்த்துகிறது. நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும் என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் நிலைநிறுத்துவோம்.

கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இந்த திருநாளில் அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜயகாந்த்

தேமுதிக தலைவர் வவிஜயகாந்த்ஆணைக்கிணங்க, கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு முதியவர்களுடன் உணவருந்தி கொண்டாடினார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கிறிஸ்துமஸ் வாழ்த்து குறிப்பில், சாதி, மத, பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும், எல்லா மதமும் நம் மதமே என்ற பரந்த சிந்தனையோடு, அனைத்து மதத்தினரின் விழாக்களையும் நாம் வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம் என்று வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly