காலரா நோய் பரவல் – கண்காணிப்பு திறப்படுத்தப்பட்டுள்ளது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டாம், வேகமாக காலரா பரவக்கூடும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
காரைக்காலில் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தங்கள் வீட்டில் அருகில் உள்ள அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் வாந்தி வயிற்றுப்போக்கு என பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து காரைக்கால் பகுதியை ஓட்டியுள்ள அனைத்து கிராமங்களிலும் சுகாதாரத் துறை பணியாளர்கள் நேரில் சென்று மக்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் கூறுகையில் பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டாம், வேகமாக காலரா பரவக்கூடும். எனவே வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு மருந்துகளை வழங்க போதுமான மாத்திரைகள் மருத்துவமனைகள் இருக்கிறதா என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.