அகழாய்வில் சோழர்கால தொல்பொருட்கள் கண்டெடுப்பு!
வடக்குப்பட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சோழர்கால தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு.
தமிழகத்தில் கீழடி, கொற்கை, பெருநகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. அப்போது, முந்தைய காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு பகுதியில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சோழர் கால தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுடுமண் பொம்மைகள், செம்பு வளையங்கள், செம்பு பாத்திரம், விலை உயர்ந்த கல்மணிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.