பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 to 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், பள்ளிகள் திறப்பதற்கான ஆலோசனை கூட்டம் ஏற்கனவே முதலமைச்சருடன் முடிவடைந்துவிட்டது, அதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் பள்ளிகளை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது என்றும் கட்டாயம் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர், 80% க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முதல்வருடனான ஆலோசனை கூட்டத்தில் 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கக் கோரி கோரிக்கை வைத்துள்ளோம்.
ஆனால், மற்ற மாநிலங்களில் 1 முதல் 12 வரை பள்ளிகளை திறக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கவேண்டும் என்றும் அதனை சிறப்பாக செயல்படுத்துவோம் எனவும் வைத்துள்ளோம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என தெரிவித்தார். மேலும், பள்ளிகளில் புத்துணர்வு வகுப்புகள் ஏற்கனவே நிறைவு பெற்றது. இனி வழக்கமான வகுப்புகள் நடைபெறும் என்றும் பிப் 1-ஆம் முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டால் மே மாதத்தில் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்வு நடத்த முடிவு எடுத்துள்ளோம் என்றார்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…