கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் சாக்லேட் திருவிழா.!

Default Image
  • கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உதகையில் தொடங்கி உள்ள சாக்லேட் திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
  • கீழடியில் கிடைத்த பழங்கால பொருட்களில் பொறிக்கப்பட்டிருந்த பிராமி, தமிழி போன்ற எழுத்துகல்ள் சாக்லேட் திருவிழாவில் பொறிக்கப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தனி ருசி தான். இந்தியா முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வரும்போது இந்த சாக்லேட்டை தவறாமல் வாங்கி செல்வார்கள். அதேபோல் ஆண்டுதோறும் ஊட்டியில் சாக்லேட் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சாக்லேட் திருவிழா தற்போது தொடங்கியுள்ளது.

தனியார் நிறுவனத்தின் சார்பாக 15 நாட்கள் நடைபெறும் இந்த சாக்லேட் திருவிழாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு விதமான சாக்லேட் தயாரிப்புகள் காட்சிகளுக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் 120 கிலோ எடை கொண்ட சாக்லேட்டால் தயாரிக்கப்பட்ட 2020 வடிவிலான சாக்லேட் உருவமும் பார்ப்போரை கவர்ந்துள்ளது. பின்னர் கீழடியில் கிடைத்த பழங்கால பொருட்களில் பொறிக்கப்பட்டிருந்த பிராமி, தமிழி போன்ற எழுத்துகல்ள் சாக்லேட் திருவிழாவில் பொறிக்கப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அத்துடன் மூங்கில் அரிசி, தினை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட 8 தானியங்களை கொண்டு உருவாக்கபட்ட சாக்லேட்டுகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். ஒரு கிலோ 300 ரூபாய் முதல் கிலோ 3500 ரூபாய் வரை விலை கொண்ட சாக்லேட் வகைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. உதகைக்கு சுற்றுலாவிற்கு வரும் அனைவர்க்கும்இந்த திருவிழாவும் ஒரு பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்