குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்த சென்னையை சேர்ந்த பெண் கோவைக்கு மாற்றம்!
மதுரையில் இருந்து கோவை தனியார் மருத்துவமனைக்கு ,தேனி குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். 50 சதவீத தீக்காயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், கோவை கங்கா மருத்துவமனைக்கு ஜெயஸ்ரீ மாற்றப்பட்டார். கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து கோவைக்கு 40 நிமிடங்களில் அவர் அழைத்து வரப்பட்டார்.
தோல் சிகிச்சை சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள ஜெயஸ்ரீக்கு, தனி மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கங்கா மருத்துவமனையில் ஸ்கின் பேங்க்(skin bank) எனப்படும் தோல் சேமிப்பு வங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.