சித்திரை திருவிழா- பக்தர்களுக்கு அனுமதி..!

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பக்தர்களின்றி நடைபெற்றது. மேலும், திருக்கல்யாணம் , திக் விஜயம் உள்ளிட்ட விழாக்களும் பக்தர்களின்றி நடைபெற்றது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16-ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.