குதிரைகளை அடையாளம் காண உடலில் “சிப்” பொருத்தப்படும் – நீலகிரி ஆட்சியர் நடவடிக்கை!
நீலகிரி மாவட்டம் உதகையில் பெருகி இருக்கும் குதிரைகளை எளிதில் அடையாளம் காண்பதற்கு அவற்றின் கழுத்தில் சிப் ஒன்று பொறுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் முக்கியமாக இருக்கு உதகையில், குதிரைகள் மற்றும் மாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், சர்வேதச கால்நடை சேவை அமைப்பு முதல் கட்டமாக குதிரைகளை அடையாளம் காண அவற்றின் காலத்தில் சிப் ஒன்றை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தனி பதிவெண் கொண்ட அந்த சிப் குதிரையின் கழுத்தில் ஊசி மூலம் பொறுத்தப்பட்டு இருக்கும்.அந்த சிப்பில் , குதிரையின் பாலினம், அடையாளம் மற்றும் உரிமையாளர் விவரம் ஆகியவை இடம் பெற்றிருக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் இலியானா லிட்டர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் குதிரையின் உரிமையாளர்கள் கண்டறியட்டு அடையாளம் காணப்பட்டு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.