சின்ன பசங்கனு தகராறு பண்ணிட்டு போய்ட்டாங்க.. நானா இருந்தா? – சீமான் ஆவேசம்!

Default Image

என்னை தொட முடியவில்லை என்பதால் என்னுடன் இருப்பவர்களை கைது செய்கின்றனர் என்று சீமான் விமர்சனம்.

சென்னை கொளத்தூர் பகுதியில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொளத்தூர் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக குறிப்பிட்ட இடம் எடுப்பதாக அதிகாரிகள் கூறிவிட்டு, மக்களை முன் அறிவிப்பு இல்லாமல் வெளியேற்றி இருக்கின்றனர். இப்பகுதியில் 50க்கும் மேற்ப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது.

அரசு மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற திட்டமிட்டிருந்தால் இழப்பீடு, மாற்று இடம் குறித்து ஏன் இதுவரை பேசவில்லை? என கேள்வி எழுப்பினார். மக்களை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு வீடுகளை இடித்திருக்க வேண்டும். திடீரென வாழ்விடத்தை இழந்து வீதியில் நிற்பது வேதனையளிக்கிறது.

அதுவும் முதல்வர் தொகுதிலேயே இப்படி நடக்கிறது என்பது சொல்வதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், இஸ்லாமியர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. பாஜக என்ன கோட்பாடு வைத்துள்ளதோ, அதையே தான் திமுகவும் பின்பற்றுகிறது.

இதைத்தான் நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது. அரசுக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கை வைப்போம். இல்லையென்ற டெல்லி போல் மைய பகுதியான திருச்சியை தேர்வு செய்து தொடர் போராட்டம் நடத்துவோம். இஸ்லாமிர்களை விடுதலை செய்யும் வரை நாங்கள் விடமாட்டோம் என கூறினார்.

என் உரிமை நான் கூட்டத்தில் பேசும்போது செருப்பு காட்டி பேசினேன். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பேசுகின்றனர். என்னை தொட முடியவில்லை என்பதால் என்னுடன் இருப்பவர்களை கைது செய்கின்றனர். நான் கூட்டத்தில் பேசியபோது காலணி காட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பேசுகின்றனர்.

ஓரளவுதான் பொறுமையாக இருக்க முடியும். மேடையில் ஏறி தகராறு பண்றது எல்லாம் திமுக தான். இதைத்தான் அவர்கள் செய்வார்கள், மேடையில் தம்பிகள் சின்ன சின்ன பசங்களா இருந்ததனால், மேடையேறி தகராறு பண்ணிட்டு போய்ட்டாங்க, இதே மேடையில் நான் இருந்திருந்தால் செருப்பை காட்டுனத்தோடு விட்டிருக்க மாட்டேன், அடித்து வெழுத்துருப்பேன் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்