முடிந்தது 2 நாள் பயணம் !சென்னையில் இருந்து புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்
சென்னையில் இருந்து புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.
2 நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகம் வந்தார்.நேற்று மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.அங்கு உள்ள கடற்கரை கோயிலின் சிறப்பை விளக்கினார் பிரதமர் மோடி.மேலும் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் இருநாட்டு தலைவர்களும் கண்டுகளித்தனர்.
இந்த நிலையில் இன்று கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் ஆலோசித்தனர்.இதற்கு பின் இரு தலைவர்கள் முன்னிலையில் இந்திய – சீன உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கோவளத்தில் தமிழக கலைஞர்களின் கைவினைப்பொருட்களை சீன அதிபர், பிரதமர் மோடி பார்வையிட்டனர்.தொடர்ந்து சீன அதிபர் உருவம் பொறித்த சிறுமுகை பட்டை, சீன அதிபருக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி .மேலும் பிரதமர் மோடியின் உருவம் பொறித்த சீன பீங்கான் தட்டை பிரதமர் மோடிக்கு, பரிசாக கொடுத்தார், சீன அதிபர் ஜின்பிங்.
இறுதியாக பயணத்தை முடித்த சீன அதிபர் ஜின்பிங்கை ஓட்டலில் இருந்து வழியனுப்பி வைத்தார் பிரதமர் மோடி.2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.சீன அதிபரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் வழியனுப்பிவைத்தனர்.