#BREAKING: சீன கடன் செயலி விவகாரம்… அமலாக்கத்துறை விசாரணை..!
சீன செயலி மூலம் கந்து வட்டி வசூலித்து மோசடி செய்தது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கில் இதுவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்று விசாரணை மேற்கொண்டு அமலாக்கத்துறை வருகின்றனர்.
சீன செயலி மூலம் கடன் தந்து டார்ச்சர் செய்ததாக 2 சீனர்கள் உட்பட 4 பேர் கைது செய்து சிறையில் உள்ளனர். இவர்களுக்கு 1000-க்கும் மேற்பட்ட சிம்கார்டு வழங்கியதாக 4 பேரை நேற்று மத்திய பிரிவு போலீசார் கைது செய்து மொத்தமாக இந்த வழக்கில் எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு அவர்களை காவலில் எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், இந்த வழக்கில் இரண்டு சீனர்கள் உள்ளதாலும், வெளிநாட்டு பணம் என்பதாலும் இந்த வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து அமலாக்கத்துறை பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளது.