சீன அதிபரின் தமிழக வருகைக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு ! திபெத்தைச் சேர்ந்த 8 பேர் கைது
சீன அதிபர் ஜின்பிங் தமிழகம் வரும்போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற திபெத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 11-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர் .இதனையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.இதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங் தமிழகம் வரும்போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்த திபெத் நாட்டைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன் பெயரில் சென்னை கிழக்கு தாம்பரத்தில் தங்கியிருந்த திபெத்தைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்து இவர்களை விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.