வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிம்பன்ஸி வகை குரங்கு குட்டியை ஈன்றுள்ளது..!
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிம்பன்சி வகை குரங்கிற்கு குட்டி பிறந்துள்ளது என்று பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதியன்று சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் வாழ்ந்த சிம்பன்ஸி ஜோடியை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வந்தனர். ராக்ஸ்டார் ஜோடியாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு கொம்பே, கௌரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் மகிழ்ச்சியான தம்பதியாக இருப்பவர்கள் கொம்பே(28) மற்றும் கௌரி(23). சிம்பன்ஸி கௌரி கடந்த 9-ஆம் தேதியன்று குட்டியை ஈன்றுள்ளது. தற்போது கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் தாயும், குட்டியும் இருக்கிறார்கள். மேலும், இவர்கள் இருவரும் நலமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது ஊரடங்கால் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கும் பொழுது பொதுமக்கள் சிம்பன்ஸி குரங்குகளான கொம்பே, கௌரியுடன் குட்டியையும் காண வாய்ப்பு உள்ளது.