குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்; அவர்களை தண்டிக்க வேண்டாம் – செல்வமேரி அம்மா!

Default Image

பேருந்திலிருந்து என்னை இறக்கி விட்டவர்களை தண்டிக்க வேண்டாம், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என பாதிக்கப்பட்ட செல்வமேரி அம்மா கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். தான் நடந்து சென்று வீட்டை அடைந்ததாக கலக்கத்துடன் கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் கண்டனத்தை பெற்றது.

இந்நிலையில், மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட ஓட்டுநர் மைக்கல், நடத்துனர் மணிகண்டன் மற்றும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நேரக் காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை பொது மேலாளர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

தற்பொழுது இது குறித்து பேசியுள்ள மூதாட்டி செல்வம் அவர்கள், தன்னை பேருந்திலிருந்து இறக்கிவிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தண்டிக்க வேண்டாம் எனவும், அதனால் அவர்களது குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்