தாயிடம் இருந்து சொத்தை பெற்று கொண்டு தாயை கைவிட்ட பிள்ளைகள்! தாயின் நீதிபோராட்டத்திற்கு கிடைத்த அதிரடியான வெற்றி!
கோவைமாவட்டம், ராக்கிப்பளையம் பகுதியில் வசித்து வருபவர் பாலம்மாள். இவர் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டார். அப்போது அவர், அக்கூட்டத்தில், தான் சுயமாக சம்பாதித்த நிலத்தினை மகன்களுக்கு பத்திரப்பதிவு செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
நிலங்களை பெற்றுக் கொண்ட மகன்கள் அதன்பின் என்னை முறையாக பார்த்துக் கொள்வதில்லை என்றும், முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தான் செய்த பத்திரப்பதிவை ரத்து செய்து தர வேண்டுமென மனு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மேற்கொண்ட நடவடிக்கையில், பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007 பிரிவு 23-ன் படி, கணவரை இழந்து வாழ்ந்து வரும் பாலம்மாள் தன்னுடைய மகன்களுக்கு எழுதிக்கொடுத்த செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாலம்மாளின் மகன்களாகிய சசிகுமார், முருகானந்தம் மற்றும் ரமேஷ் ஆகிய மூன்று பிழைகளும், அவருக்கு மாதம் தலா ரூ.3,000, அவர் உயிரோடு இருக்கும் வரை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.