குடியை விடு.! படிக்க விடு.! முதமைச்சர் வீடு நோக்கி நடைபயணம் மேற்கொண்ட சிறார்கள்.!
சேலத்தை சேர்ந்த ஆகாஷ், விக்டோரியா, ஆதாரஸ், சபரி, சுப்ரியா ஆகிய சிறார்கள் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இருக்கும் முதல்வர் வீடு நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி முதல் அந்த ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டன. அதன் படி பல்வேறு மாநிலங்கள் மதுக்கடைகள் திறந்தன.
இதே போல நாளை முதல் தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன.
இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், சேலத்தை சேர்ந்த ஆகாஷ், விக்டோரியா, ஆதாரஸ், சபரி, சுப்ரியா ஆகிய சிறார்கள் சேலத்தில் இருக்கும் முதல்வர் வீடு நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். அவர்கள் கையில் குடியை விடு, படிக்க விடு எனும் வாசகம் அடங்கிய பதாகைகள் இருந்தன. அவர்கள் சுமார் 30 கிமீ நடைபயணம் மேற்கொண்டனர். ஆனால், அவர்களை முதல்வர் வீடு அருகே ஓ.எம்.ஆர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர்.