லட்சத்திற்கு விலை போகும் ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள்! இதன் பின்னணியில் செயல்படுவது யார்?
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, ஏழை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள், தவறான உறவில் பிறக்கும் குழந்தைகளை வாங்கி, குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு விற்கும் அவலம் இப்பகுதியில் நடந்து வருகிறது.
குழந்தையின் பாலினம், எடை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில், 3 முதல் 4 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த குழந்தை விற்பனையின் பின்னணியில், ஒய்வு பெற்ற செவிலியர் ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
மேலும், நாமக்கல் நகராட்சியில், விற்பனை செய்யப்படும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கி கொடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து குழந்தைகளை திருடிக் கொண்டு வந்து விற்பனை செய்வதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இவர்களுக்கு இடைத்தரகாராக செயல்படும் பெண், குழந்தை இல்லாத தமபதிகளிடம் பேசும் அடியோவும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.