நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது – சென்னை மாநகராட்சி உத்தரவு
நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவு.
சென்னை: மூவரசம்பேட்டையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக, இன்று காலை குளத்தில் இறங்கியபோது இளைஞர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் நீச்சல் தெரிந்த பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் துணை இல்லாமல் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து குறிப்பிடுகையில், 3.5 அடி ஆழத்திற்கு மேல் உள்ள நீச்சல் குளங்களில், 4 அடி உயரத்துக்கு குறைவாக உள்ள சிறுவர்களுக்கு அனுமதி இல்லை, நீச்சல் குளங்களில் டைவ் அடிப்பது போன்ற சாகசங்கள் செய்ய அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால், விதிமுறைகளை முறையாக கண்காணிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.