வேலூர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்கள் தாக்குதல்!! போலீஸ் குவிப்பு!
வேலூர் அருகே காகிதப்பட்டறை பகுதியிலுள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் கோட்டாட்சியர் கவிதா விசாரணை.
வேலூரில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்கள் மீண்டும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறார் குற்றவாளிகள் நேற்று தப்பிய நிலையில், சிறுவர்கள் இன்று ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கூர்நோக்கு இல்லத்தில் உள்ள பொருட்களை உடைத்து சிறார்கள் தாக்குதல் நடத்தியாக தகவல் கூறப்படுகிறது.
அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள சிறுவர்கள் மீண்டும் ரகளையில் ஈடுபட்டதால் கோட்டாட்சியர் கவிதா விசாரணை நடத்தி வருகிறார். சிறார்கள் மோதலை தொடர்ந்து கூர்நோக்கு இல்லத்தை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிறார்கள் தப்பிக்காத வண்ணம் இல்லத்தை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி, கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.