‘குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் – ஒளிச்சுடர்கள்’ – குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்த முதல்வர்..!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இன்று நாடு முழுவதும், குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் , ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் – ஒளிச்சுடர்கள்! ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள்! 

குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழலைப்பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகிக் கற்க துணை நிற்போம்! குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் – உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்