தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்படும் சிறார்கள்.. இன்று 13 வயது சிறுவன் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்ததில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 18 பேரும், அரசு மருத்துவமனையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில் குறிப்பாக, கொரோனாவால் நாளுக்கு நாள் சிறார்கள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தமாக 4,225 சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர். அதில் இன்று, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் கொரோனா சோதனை முடிவில் கொரோனா உறுதியானது. கொரோனா மட்டுமின்றி நிமோனியா, மற்றும் சுவாச பிரச்சனையால் 27.06.2020 அன்று மாலை 09.15 மணிக்கு இறந்தார்.