குழந்தை விற்பனை வழக்கு :அமுதவள்ளி உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

Default Image

குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன் வழங்க நாமக்கல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர்  அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்  நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.இதில் அமுதவள்ளி உட்பட 3 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கைதாகி உள்ள நிலையில் அமுதவள்ளி, அவரின் கணவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர்  ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.அதில் வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன் வழங்க நாமக்கல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. அமுதா, கணவர் உள்பட கைதான 5 பேருக்கும் ஜாமீனை மறுத்துள்ளது நாமக்கல் நீதிமன்றம்.மேலும்  ரவிச்சிந்திரன், செல்வி, லீலா, பர்வீன், ஹசீனா ஆகியோருக்கு ஜாமீன் மறுப்பு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்