குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்.. பெற்றோர்களை எச்சரித்த சீர்மிகு காவல்துறை..
- இந்திய திருமணச் சட்டப்படி ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆனாலும் பல்வேறு தரப்பினரும் தகுந்த வயதை எட்டாமல் திருமனத்தை கட்டாயமாகவும், ஆசை வார்த்தை கூறியும் நிகழ்த்தும் நிகழ்வுகளும் நடந்தும் வருகிறது.
இதே போல் ஒரு நிகழ்வு திருப்பத்தூரில் 17 வயது ஆகும் சிறுமி ஒருவருக்கு நடக்க இருந்த திருமணத்தை காவல்துறை தற்போது தடுத்து நிறுத்தி உள்ளது. இந்த திருமனம் குறித்த இரகசிய தகவல் மாவட்ட எஸ்.பி.விஜயகுமாருக்கு கிடைத்ததை அடுத்து அந்த சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் சிறுமியின் பெற்றோரை அழைத்த காவல்துறையினர் குழந்தை திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். எத்தனை விழிப்புணர்வு கொடுத்தாலும் இன்னமும் குழந்த திருமணம் நடந்து கொண்டே இருக்கிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அனைவரும் குழந்தை திருமணம் வேண்டாம் என்ற எண்ணம் சென்று சேரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.