சென்னையில் ஓரே நாளில் இரண்டு வெவ்வேறு முக்கிய இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. முதலில் அசாம் மாநிலத்தில் இருந்து பார்ஸீனா என்கிற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னை வந்துள்ளார். உடன் அவரது நண்பர் ஒருவரும் வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலையில் வந்திறங்கிய அவர்கள் ரயில்நிலையயில் குழந்தைகளுடன் படுத்துறங்கியுள்ளனர்.
பின்னர் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்க்கும் போது, 2 வயது நிரம்பிய ரக்ஷிதா என்கிற பெண் குழந்தையை மட்டும் காணவில்லை. உடனே பதறிப்போன அவர்கள் ரயில் நிலையத்தில் தேடி பார்த்துவிட்டு, பின்னர், ரயில்நிலைய போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
அதேபோல, சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்துவந்த ஜானி – நந்தேஷா தம்பதியினர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. அவர்களிடம் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் அந்த 8 மாத ஆண்குழந்தையை நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். நம்பி அந்த இளம் பெண்ணுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளார்.
குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் என கூறி மருத்துவமனைக்கு கூட்டி சென்ற அவர், அந்த 8 மாத குழந்தையுடன் தப்பித்து விட்டார். அதன் பின்னர் அந்த பெண்ணையும், குழந்தையும் தம்பதியினர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தேடி பார்த்துள்ளனர். ஆனால், குழந்தையுடன் அந்த இளம் பெண் தப்பித்துவிட்டார்.
இச்சம்பவம் குறித்தும் மஹாராஷ்டிரா தம்பதியினர் போலீசில் புகாரளித்துள்ளனர். ஒரே நாளில் சென்னையில் இருவேறு முக்கிய இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளது சென்னை மக்களிடையே அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…