கடலூர் மாவட்டம் சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து பெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளரான இவர் சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் திருமாறன் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் திருமாறன் 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் முத்துப் பெருமாள் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த மறுநாளே கிராமங்களுக்கு சென்று தனக்கு வாக்களித்த அனைவருக்கும் முத்துப் பெருமாள் நன்றி கூறினார். அதுமட்டுமல்லாமல் அப்போது உங்களுக்கு பிரியாணி விருந்து வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி பெரியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாண்டிக்குழி கிராமத்தில் கடந்த இரண்டாம் தேதி சிக்கன் பிரியாணி விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த விருந்தில் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…