முதல்வர்களுக்கு இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தப்படும் – சென்னை மாநகராட்சி
சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இல்லம் சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இல்லத்திற்கே சென்று பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 60 வயதை கடந்த 1 டோஸ் செலுத்தாதவர்களுக்கும், இரண்டாவது டோஸ் செலுத்த காலம் கடந்தவர்களுக்கும் இல்லம் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, தடுப்பூசி செலுத்த 1913, 044-2538 4520, 044-4612 2300 என்ற எண்களில் தொடர்பு கொண்டு இல்லங்களிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.