தாயுள்ளம் கொண்ட முதல்வர்..! ஒன்றிய அரசு என்று ஒன்று இருக்கிறதா? – ஜோதிமணி எம்.பி
தமிழக மக்களின் இரத்ததை உறிஞ்சி ஜி எஸ் டி உள்ளிட்ட வரிகள் மற்றும் பெட்ரோல்,டீசலில் 25 லட்சம் கோடி கொள்ளையடித்துள்ள மோடி அரசு செய்ய மறுப்பது ஏன்?
கடந்த 2 ஆண்டு காலமாககொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒன்றிய அரசு என்று ஒன்று இருக்கிறதா? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்துடன் செய்கிற ஒன்றை ,தமிழக மக்களின் இரத்ததை உறிஞ்சி ஜி எஸ் டி உள்ளிட்ட வரிகள் மற்றும் பெட்ரோல்,டீசலில் 25 லட்சம் கோடி கொள்ளையடித்துள்ள மோடி அரசு செய்ய மறுப்பது ஏன்?’ என பதிவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசு என்று ஒன்று இருக்கிறதா? தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin தாயுள்ளத்துடன் செய்கிற ஒன்றை ,தமிழக மக்களின் இரத்ததை உறிஞ்சி ஜி எஸ் டி உள்ளிட்ட வரிகள் மற்றும் பெட்ரோல்,டீசலில் 25 லட்சம் கோடி கொள்ளையடித்துள்ள மோடி அரசு செய்ய மறுப்பது ஏன்? pic.twitter.com/p89tbYwEkB
— Jothimani (@jothims) December 7, 2021