தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு நடத்த விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார்.
திருச்சி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
குறிப்பாக சென்னையில் மழையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு நடத்த விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். பின்பு திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தஞ்சை செல்கிறார். முதல்வரின் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…