அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை
மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் .காணொளி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்துகொண்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணி தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.