தலைமைச்செயலர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு..!
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான வழக்குகளில் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு.
கடந்த 2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் போக்குவரத்து வசதி இல்லை என வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தவில்லை என கூறி மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. அதில், 2017-க்குப் பிறகு வாங்கப்பட்ட 4,381 பேருந்துகளில் ஒரு பேருந்தில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி கடந்த 2005-ம் ஆண்டு முதல் பல உத்தரவு பிறப்பிக்கப்படும் முறையாக அமல்படுத்தவில்லை. 15 ஆண்டுகளாக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணம் செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்காதது ஏன்..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும், டிசம்பர் 10-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க தலைமை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.