வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தலைமை செயலாளர் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை….
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நல்ல மழை பொழிவைக் கொடுக்கும். அதேபோல் அந்த மழை பொழிவால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு பொதுமக்களுக்கும் அரசுக்கும் மிகுந்த சிரமத்தை கொடுக்கும்.எனவே இதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது தமிழகஅரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை சென்னை தலைமை செயலகத்தில் சரியாக பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.