தலைமை செயலாளர் இறையன்புக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்.
பிப்ரவரி மாதத்துடன் தலைமைச் செயலாளர் இறையன்பு விருப்ப ஓய்வு பெற்று, மாநில தலைமை தகவல் ஆணையராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு துறை அதிகாரிகள் மாற்றம், புதிய அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டு, பதவி வகித்து வருகிறார்.
தலைமை செயலாளராக செயல்பட்டு வரும் இறையன்பு, நேர்மையானவர், எளிமையானவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் என அனைவராலும் பாராட்டப்படக்கூடியவர். இவரின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் வரை உள்ளது. ஆனாலும், வரும் 28ம் தேதியுடன் தலைமை செயலாளர் பதவியில் இருந்து இறையன்பு விருப்ப ஓய்வுபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்பின் மார்ச் 1ம் தேதியில் இருந்து தலைமை செயலாளர் பதவிக்கு நிகரான அதிகாரம் கொண்ட தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி இறையன்புக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…