தேனாம்பேட்டை கொரோனா வார் ரூமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார் ரூமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 10 மணி அளவில் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு செய்தார் .
அப்பொழுது அவர் வார் ரூமிற்கு வந்த அழைப்பை எடுத்து யார் எங்கிருந்து பேசுகிறீர்கள் தேவையான உதவிகள் கிடைத்ததா என்று கேட்டறிந்தார்.பின்பு அங்கு நடக்கும் செயல்பாடுகளை அதிகாரிகள் முதலமைச்சருக்கு விளக்கினர்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள்,வெண்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன், மருந்து கையிருப்பு – ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒருங்கிணைக்கும் பணிகளை கொரோனா கட்டளை மையம் செயல்படுகிறது.
இந்த ஆய்வின் போது முதல்வரின் செயலாளர்கள் உதய்சந்திரன், உமாநாத், தாரேஸ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் படுக்கைகள் – மருந்து கையிருப்பு – உயிர்வளி ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா கட்டளை மையத்தை (War Room) பார்வையிட்டேன்.#Covid19 கட்டுப்படுத்தலில் தமிழகத்தில் நிலவி வந்த
குழப்பங்களை சீராக்கி திறனுடன் கையாளும் பாதையில் வெகு விரைவாக பயணிக்கிறோம். pic.twitter.com/0O2URuDTiv— M.K.Stalin (@mkstalin) May 14, 2021