முதல்வர் டெல்லி செல்லவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக பயணம் ரத்து.
சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி. கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் 8 மணியளவில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
முதல்வர் பயணம் ரத்து
இந்த நிலையில், முதல்வர் டெல்லி செல்லவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானம் தாமதமான நிலையில், சென்னை விமான நிலையத்தில் 1 மணி நேரம் காத்திருந்து வீடு திரும்பியதாகவும், நாளை காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் எனும் Japanese Encephalitis (JE) எனும் வைரஸ் காய்ச்சல் பரவிய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றே புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும்…
சென்னை : நேற்று (நவம்பர் 28) விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை (நவம்பர் 26) முன்னிட்டு,…
டெல்லி : முன்னதாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபேரலி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றி…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல்…
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு…