வழிகாட்டுதல் குழுவில் முதல்வர் ஆதரவாளர்கள் அதிகம்..!
சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி அக்டோபர் 7 (அதாவது இன்று ) அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.
கடந்த சில நாட்களாகவே முதல்வர் , துணை முதல்வர் இருவரும் தங்களது ஆதரவு நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும், முதல்வர் வேட்பாளரை ஒருங்கிணைப்பாளர் ஓஅறிவிப்பார் எனவும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அதன்படி, எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.பின்னர், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்ற 11 பேரில் 5 பேர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் எனவும், 6 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் எனவும் கூறப்படுகிறது.