கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம்; சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆய்வு.!
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, முதல்வர் ஸ்டாலின் சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2 நாட்கள் ஆய்வு.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ், தமிழக அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் எவ்வாறு செய்லபடுகின்றன என்பது குறித்து களத்தில் முதல்வரால் நேரடியாக ஆய்வு செய்யப்படுகின்றன, மேலும் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் குறித்து பின் ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார்.
இந்த கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் முதற்கட்ட ஆய்வுகள் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்றதை அடுத்து இதன் இரண்டாம் கட்டமாக சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் செல்வதாகவும், அரசின் திட்டப்பணிகள் குறித்து இரண்டு நாட்கள் நேரடியாக அவு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.