முதல்வரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Default Image

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின், தலைமை செயலகம் சென்று முதற்கட்டமாக இந்த கொரோனா சூழலில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலனுக்காக 5 முக்கிய கோப்புகளில் உடனடியாக கையெழுத்திட்டார். இதனைத்தொடர்ந்து, தமிழக அரசுடன் இணைந்து பணிபுரிய முக்கிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டது.

அந்தவகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்க்கு சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுபோன்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு அதிகாரியாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பேரிடர் மேலாண் துறை ஆணையராக இருந்த ஜெகநாதன் பொதுத்துறை செயலராகவும், தேசிய மருத்துவ பணிகள் (National Health Mission) இயக்குநராக தாரேஷ் அஹமது ஐ.ஏ.எஸ் மற்றும் தமிழக சுகாதார திட்ட இயக்குநராக உமா ஐ.ஏ.எஸ் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்