முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஸ் நியமனம் ..!
முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவுக்கான சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதலாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கான சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர்வி.பி ஜெயசீலனுக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.