கோதையாறு அணையில் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு அணையில் 75 கன அடி குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, இராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வைத்தனர் .
இந்த நிலையில் மேலும் மக்களின் வேண்டுகோளை ஏற்று கொண்டு கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திட்ட அணையி லிருந்து வருகின்ற 15.7.2020 புதன் கிழமை முதல் அடுத்த மாதம் ஜூலை 13.8.2020 வரை 30 நாட்களுக்கு, ஒரு விநாடிக்கு 75 கன அடி வீதம், 194.40 மி.க.அடிக்கு மிகாமல் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இராதாபுரம் வட்டத்திற்கு குடிநீருக்கு தண்ணீர் கிடைப்பதுடன், 17000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் அறிக்கையில் கூறியுள்ளார், மேலும் நீரை அனைத்து விவசாய பெருமக்கள் அனைவரும் சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025