டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் ஆகியோர் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர்.
டெல்லியில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் சந்தித்துள்ளனர்.
அப்போது பேசிய ஸ்டாலின், டெல்லி அரசான ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பாஜக பல தொந்தரவுகளை அளித்து வருவதாக கூறினார், மேலும் தேர்தல் காரணங்களுக்காக மட்டுமில்லாமல் ஜனநாயகத்தைக் காக்கவேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் நாம் அனைவரும் ஒன்றிணைவது அவசியமாக உள்ளது. ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாஜக கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் அந்த மசோதாவை தோற்கடிக்க முடியும். இதற்காக ஆதரவு கோரிவரும் எங்களுக்கு, பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் அளித்துவரும் ஆதரவு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என்று கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு, பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மன் கூறியதாவது, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலமும், அவசர சட்டங்கள் மூலமும் கட்டுப்படுத்த பாஜக நினைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…