முதல்வரின் தாயார் மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Default Image

முதல்வரின் தாயார் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், உறவினர்கள், அதிகாரிகளும் நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் திமுக தலைவர் முதல்வரின் தாயார் மறைவிற்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

முதல்வரின் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம், இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay