தமிழ்நாட்டில் உள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
தமிழ்நாட்டில் உள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முக்கியமான சுற்றுலா மையங்கள் மற்றும் புனித தலங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகளில் உடனடியாக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் வகையில், இந்த எட்டு சாலைகளையும் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் அறிவிப்புகளை வெளியிட வலியுறுத்தி மாண்புமிகு இந்திய பிரதமருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி, வள்ளியூர் – திருச்செந்தூர், பழனி – தாராபுரம் , ஆற்காடு – திண்டிவனம், மேட்டுப்பாளையம் – பவானி, அவிநாசி -மேட்டுப்பாளையம், பவானி – கரூர் உள்ளிட்ட சாலைகளை 500 கிமீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.
Have requested Hon’ble @PMOIndia to direct @MORTHIndia to issue requisite notifications declaring eight State Highway roads in TN which connect major pilgrimage, trade and tourist centres as National Highways as they need immediate improvement. pic.twitter.com/swoyvlyo1k
— M.K.Stalin (@mkstalin) November 18, 2021