வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!
வக்ஃப் வாரிய மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். புதிய திருத்தத்தின் கீழ் வக்பு வாரியத்தில் பரந்த பிரதிநிதித்துவம் இருக்கும். வாரியத்தில் பெண்கள் கட்டாயம் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இப்போது ஷியா, சன்னி, போஹ்ரா, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், பெண்கள், முஸ்லீம் அல்லாதவர்கள் ஆகியோரும் வக்பு வாரியத்தில் இருப்பார்கள். வக்பு திருத்த மசோதா 2025 உடன் வக்பு (ரத்து) மசோதா 2024-வையும் மக்களவையில் பரிசீலித்து நிறைவேற்றினார். இந்நிலையில், வக்ஃபு திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில், “இந்திய அரசமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களை பின்பற்ற உரிமை வழங்குகிறதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 1995ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் ஒன்றிய அரசின் முடிவை திரும்பபெற வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். வக்பு சட்ட திருத்த சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப்பெற வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது. உரிமையை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கடமையாகும். வக்பு அமைப்புகளைப் பாதுகாப்பதில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துங்கள்” என்று குறிப்பிட்டள்ளார்.
1995ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் ஒன்றிய அரசின் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப்பெறக் கோரி மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/HkDpMwwT1t
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 2, 2025