#BREAKING : போதிய தடுப்பூசி வழங்கக்கோரி முதல்வர் கடிதம்..!
தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.
தமிழகத்துக்கு போதி தடுப்பூசியில் வழங்கக் கோரியும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்படும் கொண்டுவர வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி ஒதுக்கீடு செய்யவில்லை எனவே த தமிழக மக்கள் தொகை, கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும். தமிழக அரசு ஒரு கோடி தடுப்பூசி கேட்டிருந்த நிலையில் 42 லட்சம் தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்தது போல் தமிழகத்திற்கும் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்திற்கு உடனடியாக 50 லட்சம் தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். ஜூன் மாதத்திற்கான தடுப்பூசியை முதல் வாரத்திலேயே வழங்கினால் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து மேற்கொள்ள வசதியாக இருக்கும் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முதலில் தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் தயக்கம் இருந்த நிலையில் பின்னர் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தற்போது பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி வராததால் ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது என சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிலையில், தமிழகத்திற்கு தேவையான 4,20,570 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் நேற்று சென்னை வந்தன என்பது குறிப்பிடத்தக்கது