ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் செய்திருந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தங்களுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

annamalai tamilisai mk stalin

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  அறிக்கை வெளியிட்டு இருந்தார் இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என கேட்டனர். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், “அவருக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதேனும் ஒரு அறிக்கை விடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என கூறிவிட்டு சென்றார்.

Read More-“மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்., இல்லையென்றால்.,” அன்புமணி ஆவேசம்! 

இந்த விவகாரம் பெரிய பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், எங்கள் தந்தை ராமதாஸ் ஐயாவை அவமானப்படுத்திவிட்டார் முதலமைச்சர், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார். அவரை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் முதல்வர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் 

இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதிக்க வேண்டும். ஜனநாயகம் மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல்ல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா?

ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்… அதுவும் பாமக தலைவர் ராமதாஸ் பெரியவர் அவரை போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர எனக்கும் வேலை வேலையில்லாமல் இதை சொல்லவில்லை..

தமிழகத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன்… 2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும்… யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை” என மிகவும் கோபத்துடன் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

அண்ணாமலை

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும்,அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான, ராமதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது” என அண்ணாமலை கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்